Posts

தமிழீழம் போடுவதற்கு சட்டசிக்கல் ஏற்படுமா? தமிழீழம் என்ற சொல் சட்டத்திற்கு உட்பட்டதா?

Image
அண்மையில் அனைத்துலகத் தமிழர் மேம்பாட்டும்ப் பேரவை தாய் மொழி நாள் கலை நிகழ்வு நோட்டீஸ் ஒன்றினை வெளியிட்டு இருந்தனர்  அதில் தமிழீழம் என்ற சொற்பதத்தை மறைத்து  இலங்கை என பயன்படுத்திருந்தனர். இதனை கேட்டதற்கு சட்ட சிக்கல் என சாக்கு போக்கினை சொல்லினர். ஆனால் அதே  நோட்டீஸ் இல் தமிழீழ லோகோ இரண்டு  காணப்பட்டது  அதற்க்கு  சட்டசிக்கல் இல்லையா என இங்கு கேள்வி எழுகிறது.  சரி தமிழீழம் போடுவதற்கு சட்டசிக்கல் ஏற்படுமா? தமிழீழம் என்ற சொல் சட்டத்திற்கு உட்பட்டதா?  தமிழீழம் ஒரு பார்வை  ஈழத்தில் சிங்கள இனம் தோற்றம் பெற்றதாகக் கூறப்படும் காலத்திற்கு முன்னர் எழுதப்பட்ட பல்வேறு சங்க கால இலக்கியங்களில், ஈழம் என்ற சொற்பதம் அடிக்கடி கையாளப்பட்டிருப்பதோடு, அங்கு தமிழர்கள் வாழ்ந்து ஆட்சி செய்ததை உறுதிசெய்யும் பாடல்களும் காணப்படுகின்றன. இவற்றைவிட கடந்த ஆறு தசாப்தகாலப் பகுதியில் ஈழத்தீவில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் பொழுது கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு கல்வெட்டுக்கள், அங்கு வரலாற்றுக்கு முந்திய காலம்தொட்டு தமிழர்கள் வாழ்ந்ததையே உறுதி செய்கின்றன. அதேநேரத்தில் இலங்கை என்ற சொற்பதம் பண்டைக்கால தமிழ் இலக்கியங்களில் பெரும

விக்கி – மணி உடன் இணைந்து ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் போட்டி !

Image
 ஈ.பி.டி.பி A அணியும் ஈ.பி.டி.பி B அணியும் இணைந்து வரும் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுகின்றனர். கடந்த 2018 உள்ளுராட்சி தேர்தலில் ஈ.பி.டி.பி சார்பாக பாசையூர் வட்டாரத்தில் போட்டியிட்டு யாழ்.மாநகர சபை ஈ.பி.டி.பி உறுப்பினராக இருக்கும் டேமியனும், குருநகர் வட்டாரத்தில் போட்டியிட்டு ஈ.பி.டி.பி மாநகர சபை உறுப்பினராக இருக்கும் யுகாவும் இந்தமுறை விக்கி – மற்றும் மணி உடன் இணைந்து போட்டியிடுகின்றனர்.

சாவகச்சேரி பிரதேச சபை வேட்பாளர்களாக சுமந்திரன் அணி! மாமனிதர் ரவிராஜ் ஆதரவாளர்கள் முற்றாக நீக்கம்

Image
 சாவகச்சேரி பிரதேச சபை வேட்பாளர்களாகசுமந்திரன் அணி! மாமனிதர் ரவிராஜ் ஆதரவாளர்கள் முற்றாக நீக்கம்

இந்தியாவிடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எழுத்து மூலமாக கோரிக்கை

Image
 தமிழர் தேசத்தை அங்கீகரித்து அதனைப் பாதுகாக்கும் வகையில் இலங்கையில் சமஷ்டி அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கு இந்தியா முழுமையான ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எழுத்துமூலமாக கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்றையதினம் தமிழ்த் தலைவர்களுடன் நடத்திய சந்திப்பின்போது பங்கேற்றிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறித்த எழுத்துமூலமான கோரிக்கையை அவரிடத்தில் கையளித்துள்ளார். குறித்த கோரிக்கை ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான அம்சங்கள் வருமாறு, பிரித்தானியர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றதன் பின்னர் இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமானதொரு கட்டத்தில் உள்ளது. கடந்த 75 வருடங்களாக பின்பற்றப்பட்ட கொள்கைகளும் தீர்க்கப்படாத இனப்பிரச்சினையும் இலங்கையை தற்போதைய நிலைமைக்கு இட்டுச் சென்றுள்ளது. இலங்கையில் சமீபகால ஏற்பட்ட மக்களின் எழுச்சிகள் ஒரு முழுமையான ‘முறைமை மாற்றத்திற்கு’ தொடர்ந்து அழைப்பு விடுத்துள்ளமையானது கடந்த காலநிலைமைகள் தொடர்ந்தும் நீடிப்பதற்கு விரும்பவில்லை என்பதை

பித்தளை விளக்குடன் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி !

Image
வடகிழக்கில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் கட்சிகளின் கூட்டிற்கான சின்னமாக புளொட் அமைப்பின் தேர்தல் சின்னமான பித்தளை விளக்கை தூசிதட்டி அறிவித்துள்ளர். 

ஜனநாயக போராளிகள் கட்சி உள்ளே! விக்கி - மணி வெளியே!

Image
 என்னை பொம்மை போல பாவித்து தாங்கள் நினைத்ததை செய்வதற்கு முயற்சித்தார்கள் போல தெரிந்தது. அது எனக்கு மன வேதனையை ஏற்படுத்தியது அதனால் தமிழ் கட்சிகளின் கூட்டத்தில் இருந்து வெளியேறினேன் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை  இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,  ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானங்களுடன் அங்கு வந்திருந்து அதனை மேற்கொள்ள திட்டமிட்டனர்.சில விடயங்களில் இணக்கம் ஏற்பட்ட போதும் பல விடயங்கள் முரண்பாட்டை தோற்றுவித்தது. ஐந்து கட்சிகளின் கூட்டணியாக நாம் பேச்சுவார்த்தையை ஆரம்பித்த போது இன்றைய கூட்டத்தில் எமக்குத் தெரியாமல் திடீரென புதிதாக ஜனநாயக போராளிகள் கட்சியை அழைத்து வந்திருந்தனர். ஐனநாயகப் போராளிகள் கட்சி பல்வேறு குழுக்களுடன் தொடர்புடையதாக நான் அறிந்தேன். புலிகளோடு இருக்கும் போது அவர்கள் எப்படி இருந்தார்கள் என்றும் தற்போது அவர்கள் எப்படி இருக்கின்றார்கள் என்பதனையும் நாம் அறிய வேண்டும். அவர்களை ஆறாவது கட்சியாக கூட்டணிக்குள் இணைக்கும் முடிவை ரெலோ, புளொட

இனப்பிரச்சினைத் தீர்வு என்ற பெயரில் ரணிலுடன் சம்பந்தன், செல்வம், சுமந்திரன், சித்தார்த்தன் சந்திப்பு

Image
 வடக்கு கிழக்கு மாகாணங்களில் அதிகாரங்களைச் செயற்படுத்துவற்கு மேற்கொள்ள வேண்டிய விடயங்களை ஆராய்ந்து எதிர்வரும் பத்தாம் திகதி பதிலளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று வியாழக்கிழமை மாலை ஐந்து மணிக்கு ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நடத்திய சந்திப்புத் தொடர்பாக சுமந்திரன் ஊடகங்களுக்கு விளக்கமளித்தார்.    வடக்குக் கிழக்கு நிலைமைகள் தொடர்பாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவுக்கு எடுத்துக் கூறியதாகவும், சுமந்திரன் தெரிவித்தார். ரணில் விக்கிரமசிங்கவுடன் மூன்றாவது தடவையாக இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இன்றைய சந்திப்பில் பிரதமர் தினேஸ் குணவர்தன, அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ச மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துகொண்டனர். கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன், செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன், மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். ரணில் விக்கிரமசிங்கவுடன் தொடர்ச்சியாகப் பேச்சுக்கள்