Posts

Showing posts from February, 2023

தமிழீழம் போடுவதற்கு சட்டசிக்கல் ஏற்படுமா? தமிழீழம் என்ற சொல் சட்டத்திற்கு உட்பட்டதா?

Image
அண்மையில் அனைத்துலகத் தமிழர் மேம்பாட்டும்ப் பேரவை தாய் மொழி நாள் கலை நிகழ்வு நோட்டீஸ் ஒன்றினை வெளியிட்டு இருந்தனர்  அதில் தமிழீழம் என்ற சொற்பதத்தை மறைத்து  இலங்கை என பயன்படுத்திருந்தனர். இதனை கேட்டதற்கு சட்ட சிக்கல் என சாக்கு போக்கினை சொல்லினர். ஆனால் அதே  நோட்டீஸ் இல் தமிழீழ லோகோ இரண்டு  காணப்பட்டது  அதற்க்கு  சட்டசிக்கல் இல்லையா என இங்கு கேள்வி எழுகிறது.  சரி தமிழீழம் போடுவதற்கு சட்டசிக்கல் ஏற்படுமா? தமிழீழம் என்ற சொல் சட்டத்திற்கு உட்பட்டதா?  தமிழீழம் ஒரு பார்வை  ஈழத்தில் சிங்கள இனம் தோற்றம் பெற்றதாகக் கூறப்படும் காலத்திற்கு முன்னர் எழுதப்பட்ட பல்வேறு சங்க கால இலக்கியங்களில், ஈழம் என்ற சொற்பதம் அடிக்கடி கையாளப்பட்டிருப்பதோடு, அங்கு தமிழர்கள் வாழ்ந்து ஆட்சி செய்ததை உறுதிசெய்யும் பாடல்களும் காணப்படுகின்றன. இவற்றைவிட கடந்த ஆறு தசாப்தகாலப் பகுதியில் ஈழத்தீவில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் பொழுது கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு கல்வெட்டுக்கள், அங்கு வரலாற்றுக்கு முந்திய காலம்தொட்டு தமிழர்கள் வாழ்ந்ததையே உறுதி செய்கின்றன. அதேநேரத்தில் இலங்கை என்ற சொற்பதம் பண்டைக்கால தமிழ் இலக்கியங்களில் பெரும